Posts

Showing posts from 2018

10 - தன்வினை தன்னைச்சுடும்

நாம் யாருக்கேனும் தீங்கிழித்தோமாயின்..அதற்கான பலனை பின்னாளில் நாமே அனுபவிக்க வேண்டியிருக்கும். கர்ணன் வாழ்க்கையிலும் அப்படி நடந்தது,அதுவே இக்கதையாகும். முனிவர் ஒருவர் காட்டில் தியானம் செய்து கொண்டிருந்தார்.அவரது ஆசிரமத்தைச் சேர்ந்த பசுவும், கன்றும் அருகே புல்லை மேய்ந்து கொண்டிருந்த நேரத்தில், கன்றின் மீது அம்பு ஒன்று பாய்ந்தது.அக்கன்று துடிதுடித்து இறந்தது..இறக்கும் தறுவாயில் அக்கன்றின் வேதனைக் கத்தல் கேட்டு முனிவர் தியானம் கலைந்தது. அவர், இறந்த கன்றையும், தாய்ப்பசு கண்ணீருடன் நிற்பதையும் பார்த்தார். அம்பு எய்தி பசுவைக் கொன்றவனைத் தேடினார். அப்போது ஒரு வீரன் கையில் வில்லுடன் அங்கு வந்தான்.அவன்தான் அம்பை எய்திருக்க வேண்டும் என முனிவர் எண்ணினார்.அவரது கோபம் அந்த வீரன் மீது சாபமாக அமைந்தது. "சிறு கன்றின் மீது அம்பு எய்தி கொன்றவனே! உனக்கு முடிவுகாலம் வருகையில், உன் தேரில் நின்று நீ போர் புரிகையில், தேரின் சக்கரங்கள் மண்ணுக்குள் புதையும்.அந்த நேரமே உனக்கு மரண நேரமாய் அமையும் என்பதை உணர்வாயாக!" என்றார். அந்த வீரன் தான் கர்ணன். கன்றைக் கொன்ற தன் செயலால்

9 உங்கள் குணம் மாறவேண்டுமா?

மனோபாவம்.... இதை மாற்றிக் கொண்டால்..நம் குணங்களும் மாறும்.ஒருவரின் மனோபாவம்.. மற்றவர்களை குறை சொல்வதில்தான் ஆரம்பிக்கிறது.நாளாக..ஆக..எதிலும் எல்லாவற்றிலும் குறை காண்பது என்ற வழக்கம் ஏற்பட்டு விடுகிறது. பின் அதுவே..நாம் செய்யும் செயல்களைத் தூண்டுகிறது.இவற்றிலிருந்து ஒருவனால் மீண்டு வரமுடியுமா? கண்டிப்பாக முடியும்... வெற்றியும்...தோல்வியும்..பயமும்..தைர்யமும்..சோகமும்..இன்பமும்..நாம் நம் மனதை எப்படி பழக்கப்படுத்திக் கொள்கிறோமோ..அப்படியே அமையும்.எதிலும் சந்தோஷம்,துணிவு,வெற்றி காண மனதை மாற்றிக்கொள்ளுங்கள். ஒரு காரியத்தில்..வெற்றி அடைய வேண்டும் என்பவர்கள்..எதிலும் நல்லதையே பார்க்கிறார்கள்.எந்த காரியத்தையும் முடிக்க முடியும் என எண்ணுகிறார்கள்.இவர்கள் சிறிய..சிறிய காரியங்களாக எடுத்து..அதில் சாதனை புரிந்து..வெற்றி மனோபாவத்தை வலிமைப்படுத்துகிறார்கள். வெற்றியடைபவர்கள்..கருங்கல்லை..கருங்கல்லாய் பார்ப்பதில்லை.ஒரு சிற்பமாக பார்ப்பார்கள். வெற்றிகாண விரும்புபவர்கள்..வாய்ப்பை எதிர் நோக்கிக்கொண்டிருப்பர். ஆரம்ப தோல்வி கண்டு மனதளர்ச்சி வேண்டாம்.தோல்வி இல்லா மனிதன் இல்லை.தோல்வி ஒரு பாடம்..த

ஆதலினால்...

காந்தக்கல் இருக்கிறதே..அது..தான் எவ்வளவு பெரியவன் என்று பார்ப்பதில்லை..தன்னருகே வரும்..சிறு இரும்பு ஊசியையும்..தன்னுள் இழுத்துக்கொள்கிறது. கொடிகளை..மரங்கள் அரவணைத்துக்கொள்கின்றன. நதிகளின் சங்கமமாக கடல் திகழ்கிறது. நம் மனமும்..அதுபோல நம்மை அறியாது..யாருடனாவது லயித்து விடுகிறது.அது நட்பு..பாசம்..காதல்..என இடத்திற்கு ஏற்றார் போல பெயரைப் பெறுகிறது. ஒருவரிடம் நாம் வைக்கும் அன்பு..அல்லது ..மதிப்பு..பண்டமாற்று போல ..ஏதோ ஒரு பொருளுக்கு ஏதோஒரு பொருள் ..வழங்குவது போல அல்ல., ஆதலினால் காதல் செய்வீர் -------------------------------------------------- நீ எப்படி இருக்கிறாயோ..அதேபோல..நான் எப்படி இருக்கிறேனோ.அதே போல் இருந்து விட்டுப் போவோம் என்பதில் புரிந்துணர்வு இருப்பதாய் ..நான் நினைக்கவில்லை.இருவருக்கும் இடையே,,ஏற்றுக்கொள்ள இயலா..மாற்றுக்கருத்துக்கள் இருந்தாலும்..அந்த நட்பு நிலைக்க வேண்டும். ஈ.வெ.ரா.விற்கும் ராஜாஜிக்கும் அப்படிப்பட்ட நட்புதான் இருந்தது. என் மனதில் அழுக்கு இல்லை..கண்ணாடி போல சுத்தமாக இருக்கிறது...அதே போன்று என்னை புரிந்துக்கொள்ளாதவன் மனமும் இல்லை என்றால் கவலை இல்லை

6 - நீண்ட நாட்கள் வாழ...

இன்று மருத்துவம் மிகவும் முன்னேறியுள்ளது.ஆண்களின் சராசரி வயது 64 ஆகவும்..பெண்களின் சராசரி வயது 65 ஆகவும் உள்ளது. சிலர் சைவ சாப்பாடு சாப்பி ட்டால்..நீண்ட நாட்கள் இருக்கலாம் என எண்ணுகின்றனர். நீண்ட நாள் வாழ சைவ,அசைவ சாப்பாடுகள் காரணமில்லை. சுத்த சைவமான ராஜாஜியும் 94 வயது வாழ்ந்தார்...கடைசி வரை பிரியாணியை விரும்பி உண்ட தந்தை பெரியாரும் 94 ஆண்டுகள் இருந்தார். நீண்ட நாட்கள் வாழ குடும்ப ஜீன்ஸ் ஒரு காரணம் என்றாலும்...கட்டுப்பாடான வாழ்க்கையும் அவசியம். அளவான சாப்பாடு உடலுக்கு தேவையான உடற்பயிற்சி (தினமும் குறைந்தது ஒரு மணி நேரம் நடை அல்லது சைக்கிளிங்) உப்பு குறைவாக சேர்த்துக் கொள்ளவும்..இரத்த அழுத்தத்தை தவிர்க்கலாம். சர்க்கரை குறைவாக சேர்த்துக் கொண்டால்..நீரிழிவு கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். வெண்மை நிற..அரிசி,சர்க்கரை,உப்பு,மைதா ஆகியவற்றை குறையுங்கள். மனதை சந்தோஷமாக வைத்திருங்கள்.கோபத்தை விடுங்கள்.பிறர் மீது குறை காண்பதை தவிருங்கள்.பொறாமைக் குணம் வேண்டாம். மனம் களங்கம் இல்லை என்றாலே...மனம் சந்தோஷமாய் இருக்கும்.ஆரோக்ய வாழ்வு வாழலாம். நாம் வாழ்க்கையில் இன்பமாயிருக்க

5 - சோம்பித் திரியாதீர்

வாழ்வில் வெற்றியடைய---- சோம்பல்.. நம் வாழ்க்கையில் பல தருணங்களில் நமக்கு ஏற்பட்டு நம்மை அறியாமலேயே பல நஷ்டங்களை நமக்கு ஏற்படுத்தக் கூடிய ஒன்று. ஏதேனும் காரியத்தை முடிக்க வேண்டுமென்றால் ..அதை நாளைக்கு முடிக்கலாமே என்ற எண்ணமே சோம்பலின் முதல் படி.பின் நாளை..நாளை என அவ்வேலையை தள்ளிப்போடச் செய்து நமக்கு பேரிழைப்பை ஏற்படுத்தி விடும். இன்று என்பது நேற்றைய நாளை....அதை ஞாபகம் வையுங்கள் போதும். ஏதேனும் இடத்திற்கு 9.30க்கு போகவேண்டுமாயின், அவ்விடத்திற்கு 9.20க்கே செல்லுங்கள்.9.40க்கு செல்லாதீர்கள்.நேரம் தவறாமை வாழ்வில் பல நல்லவற்றை நமக்கு நாளாவட்டத்தில் தரும். சோம்பேறிகள் கூறும் அடுத்த வார்த்தை..எனக்கு அதிர்ஷ்டமில்லை..அதனால் பதவி உயர்வு கிடைக்கவில்லை.. நீங்கள் சொல்லும் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும்.. எப்போது... அன்றன்று வேலைகளை அன்றன்று முடித்து..தாமதம் இல்லாமல் அலுவலகத்தில் பணியாற்றினால்.. இலமென் றசைஇ இருப்பாரைக் காணின் நிலமென்னும் நல்லாள் நகும் வாழ வழியில்லை என அலுத்துக் கொண்டு முயற்சியின்றி சோம்பித் திரிவாரைக் கண்டு..பூமித்தாய் சிரிப்பாளாம்..(அடேய்..மக்கு..ஒவ்வொருவரும் வாழ இயற்க

4 -வெற்றியை அடையும் வழி

எந்த காரியத்தில் நாம் ஈடுபட்டாலும்..அதில் வெற்றி பெற வேண்டும் என்னும் எண்ணம் நம்மை அறியாமல் தோன்றிவிடுகிறது. எவ்வளவு சிறந்த பயன் கிடைத்தாலும்..அது தவறான வழியில் வருமேயாயின்..அப்பயனை அடைய முயற்சி செய்யாதிருப்பதே நன்மை பயக்கும். ஆனால்..இன்று எப்பாடுபட்டேனும் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இளைய தலைமுறையிடம் காணப்படுகிறது.வாழ்க்கையின் தலையாய நோக்கமாக வெற்றியை எண்ணுகின்றனர்.வாழ்க்கையில் வெற்றியடைவதை விட அமைதியாக வாழ்வதே சிறந்தது என்றனர் நம் முன்னோர்கள். கந்துக மதக்கரியை வசமாய் நடத்தலாம் கரடி வெம்புலி வாயையும் கட்டலாம்.. என்று சொன்னவர்கள்..கடைசியில் 'சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறம் அரிது' என்று கூறினார்கள். ஆகவே வெற்றியைக் காட்டிலும் சிறப்புடையதாகக் கருதப்பட்டது மன அமைதியே ஆகும். எடுத்தக் காரியம் வெற்றியடைய வேண்டும் என்பதற்கான மாற்றுக் கருத்து எதுவும் இருக்க முடியாது.ஆனால் அப்படிக் கிடைக்கும் வெற்றியில் துன்பக் கலப்பும், தீமைக்கலப்பும் இருத்தல் கூடாது.தவறான வழியில் சென்று பெறும் வெற்றி நிலைத்து இருக்காது.அது இன்பத்தையும் தராது. எந்த வழியைப் பற்றியேனும்

3 - தமிழ் வளர..

தமிழ் வாழ்க ... தமிழ் வாழ்க என்றால் மட்டும் தமிழ் வாழ்ந்துவிடுமா ? தமிழ் வாழவேண்டுமானால் .. தமிழை தமிழன்னு சொல்கிற வர்கள் அனைவரும் வாசிக்கவேண்டும் ..தமிழாசிரியர்களை மதிக்கவேண்டும் தமிழாசிரியர்களையும் , தமிழ் எழுத்தாளர்களையும் மதிக்காத மொழி எப்படி வளரும் . தமிழ் படிச்சா கேவலம்ன்னு தமிழன் நினைக்கிறான்.தெலுங்கலித் தாய்மொழியாகக் கொண்டவன்..அதே மொழியைத் தாய்மொழியாய்க் கொண்டவனைப் பார்த்தால் "பாக உன்னாரா"னு  கேட்கறான். மலையாளத்தைத் தாய் மொழியாகக் கொண்டவன் மற்றொரு அதே தாய்மொழிக்காரரனைப் பார்த்தால், "சுகம்தன்னே: என்கிறான். அதே போன்றே மற்ற மொழியினரும் நடக்கின்றனர் ஆனால்// ஒரு தமிழன் மட்டும் இன்னொரு தமிழனைப்பார்த்தால் ஹலோ ஹொவ் ஆர் யு ? ன்னு கேட்கிறான் . கொஞ்சம் யோசனை செய்தால் தமிழனுக்கு கொஞ்சம் கொஞ்சமாக தமிழ்ப்பற்று குறையுதுன்னு தோன்றுகிறது.

2 - பொதுத் தொண்டும் பணவிவகாரமும்

பொதுத்தொண்டு செய்யப் புறப்படுபவர்கள் பண விஷயத்தில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நல்ல ஆதரவு நம் காரியத்துக்கு கிடைத்தாலும் அதனால் over enthusiastic ஆகி நிறைய பணம் collect பண்ண ஆரம்பிக்கக் கூடாது.இப்படி ஆரம்பித்தால் அதற்கு ஒரு முடிவே இருக்காது.இதனாலே, உதவும் அன்பு எண்ணத்தை 'வசூல் எண்ணம்' முழுங்கிவிடும்.எப்போது பார்த்தாலும் ரசீதும்..கையுமாக அலைவதும்,பேப்பர்காரர்களைப் பிடித்து அப்பீல் ப ண்ணலாமா...அட்வெர்டைஸ்மென்ட் பிடித்து ஸோவனீர் போடலாமா..என்பதே சிந்தையாகத் தவித்துக் கொண்டிருக்கும்படியும் ஆகும்.நிறைய பணம் சேர்த்து அதைக் கையாள வேண்டியிருக்கும் போது, நாமே எப்படி மாறிப்போய் விடுவோமோ என்ற பயம் எப்போதும் இருக்க வேண்டும்.அதுவுமில்லாமல் ரொம்பவும் பணம் சேர்த்தால் ஊரிலிருப்போருக்கும் அது சரியாகப் பிரயோஜனமாகிறதா என்ற சந்தேகம் எழும்பும்.இதோடு கூட..சற்று முன் சொன்னபடி ,இஷ்டமில்லாதவனையும் நிர்பந்தப்படுத்தி வாங்குவதும்..இப்படி வாங்கிவிட்டால் அவனிடம் பந்தப்பட்டு நிற்பதும்..நம் பணியையே அசுத்தம் செய்துவிடும். ஆதலால்..எந்த நல்லக்காரியமானாலும் 'அதி'யாக அதைக

தந்தையர்-அன்னையர் தினங்கள்

மனிதனாக பிறந்த அனைவரும் தனது தாய்,தந்தையருக்கு நன்றி உள்ளவராக இருக்க வேண்டும். நம் கடைமைகளை செய்ய வேண்டும்."அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்" அவர்கள் உயிருடன் இருக்கும் காலத்தில்..அவர்களிடம் பணிவுடன் நடந்துக்கொண்டு ..நம்மால் இயன்ற வசதிகளை செய்து தர வேண்டும். அவர்கள் நமக்காக செய்துள்ள தியாகங்களுக்கு ஈடு இணை எதுவுமில்லை..அவர்கள் மனம் கோணாமல்.. அவர்களை வைத்துக் காக்க வேண்டும். நமக்கு எல்லா நாட்களுமே அன்னையர் தினம் எல்லா நாட்களுமே தந்தையர் தினம் ஏனெனில் நாம் வாழும் நாட்கள் எல்லாமே அவர்கள் கொடுத்த நாட்கள்