சோதனை

ஒருவன் தேர்வில் தோல்வியடைகிறான்.ஆனால் அவனுக்கு நல்ல வேலைக் கிடைத்து விடுகிறது.தேர்வில் அதிகம் மதிப்பெண்களைப் பெற்று தேறும் மற்றவனுக்கோ நான்கு..ஐந்து நேர்காணல்கள் சென்றும் தோல்வியையே சந்திக்க வேண்டியிருக்கிறது.அவ்வளவு ஏன்..அவதாரமனிதன் ராமனுக்கே..சோதனை மாரிசன் உருவில் வந்தது.
வேதங்களுக்கு இணையாக பேசப்படும் திருக்குறளுக்கும்..திருவள்ளுவருக்குமே சோதனை ஏற்பட்டது தெரியுமா?
மதுரையில் சுந்தரேஷ்வரரால் கொடுக்கப்பட்ட பலகை ஒன்று கடைச் சங்கத்தில் இருந்தது.அதற்கு சங்கப்பலகை என்று பெயர்.அதில் உட்கார ஒரு தகுதி வேண்டும்.தகுதியற்றவர்கள் அமர்ந்தால் அது அவர்களைத் தள்ளி விட்டுவிடும்.
திருவள்ளுவரும் திருக்குறளை எடுத்துக் கொண்டு அந்த சங்கத்திற்குப் போனார்.திருக்குறளை சங்கப் பலகையில் வைக்கச் சொன்னார்கள்.சங்கப்பலகை அதை ஏற்றுக் கொண்டால்தான் அது இலக்கியத் தரம் வாய்ந்தது என ஒப்புக் கொள்ளமுடியும் என்றார்கள் புலவர்கள்.
திருவள்ளுவரும் அதற்கு ஒப்புக் கொண்டு திருக்குறளை பலகையில் வைத்தார்.பலகை முன்னால் இருந்த சுவடிகளை எல்லாம் தள்ளிவிட்டு விட்டு திருக்குறளுக்கு மட்டுமே இடம் கொடுத்தது.திருவள்ளுவர் தாம் படைத்த இலக்கியம் தகுதி வாய்ந்தது என்பதாலேயே இச் சோதனைக்கு சம்மதித்தார்.
அதுபோல நாமும் நமக்கு ஏற்படும் சோதனைகளையும்..தன்னம்பிக்கையுடன் எதிர்க் கொண்டு..அதைக் கடந்துவரவேண்டும்.
அதற்கு..நாம் செய்யும் செயல்கள் நல்லவையாக இருந்தால் போதும்.தீயவையாக இருந்தால் தீமையே உண்டாகும்.
தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்
தீய செயல்கள் தீமையையே விளைவிக்கும் என்பதால் அச்செயல்களை தீயைவிடக் கொடுமையாக எண்ணி அவற்றைச் செய்திட அஞ்ச வேண்டும்.
தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றுந்
துன்னற்க தீவினைப் பால்
தனது நலத்தை விரும்புகிறவன் தீய செயல்களின் பக்கம் சிறிதளவுகூட நெருங்கலாகாது. ஏதாவது ஒரு காலகட்டத்தில் சோதனைகளை கடந்து வராதவர்களே இருக்க முடியாது.வாழ்வில் ஏற்படும் தோல்விகளைக் கண்டு மனம் உடைந்து விடக் கூடாது.தோல்விகளைக் கண்டு கஜினி முகமது மனம் உடைந்திருந்தால் வெற்றியை அவன் சுவைத்திருக்கமுடியாது

Comments

Popular posts from this blog

சிர்ப்போம்...வாய் விட்டு சிரிப்போம்

8-உண்மையும்..பொய்யும்