சோதனை
ஒருவன் தேர்வில் தோல்வியடைகிறான்.ஆனால் அவனுக்கு நல்ல வேலைக் கிடைத்து விடுகிறது.தேர்வில் அதிகம் மதிப்பெண்களைப் பெற்று தேறும் மற்றவனுக்கோ நான்கு..ஐந்து நேர்காணல்கள் சென்றும் தோல்வியையே சந்திக்க வேண்டியிருக்கிறது.அவ்வளவு ஏன்..அவதாரமனிதன் ராமனுக்கே..சோதனை மாரிசன் உருவில் வந்தது. வேதங்களுக்கு இணையாக பேசப்படும் திருக்குறளுக்கும்..திருவள்ளுவருக்குமே சோதனை ஏற்பட்டது தெரியுமா? மதுரையில் சுந்தரேஷ்வரரால் கொடுக்கப்பட்ட பலகை ஒன்று கடைச் சங்கத்தில் இருந்தது.அதற்கு சங்கப்பலகை என்று பெயர்.அதில் உட்கார ஒரு தகுதி வேண்டும்.தகுதியற்றவர்கள் அமர்ந்தால் அது அவர்களைத் தள்ளி விட்டுவிடும். திருவள்ளுவரும் திருக்குறளை எடுத்துக் கொண்டு அந்த சங்கத்திற்குப் போனார்.திருக்குறளை சங்கப் பலகையில் வைக்கச் சொன்னார்கள்.சங்கப்பலகை அதை ஏற்றுக் கொண்டால்தான் அது இலக்கியத் தரம் வாய்ந்தது என ஒப்புக் கொள்ளமுடியும் என்றார்கள் புலவர்கள். திருவள்ளுவரும் அதற்கு ஒப்புக் கொண்டு திருக்குறளை பலகையில் வைத்தார்.பலகை முன்னால் இருந்த சுவடிகளை எல்லாம் தள்ளிவிட்டு விட்டு திருக்குறளுக்கு மட்டுமே இடம் கொடுத்தது.திருவள்ள...